விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் – 90 தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!

0

இன்று காலை விழுப்புரத்தில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக சார்பில் மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.

வேலைவாய்ப்பு:

தற்போது கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஆயிர கணக்கானவர்கள் தங்களது வேலையை இழந்து தவித்தனர். தற்போது கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வருவதால் சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்களை எடுத்து வருகின்றனர். தற்போது இதனை தொடர்ந்து விழுப்புரத்தில் இன்று காலை மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மண்டல மையத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மாவட்ட மையம் சார்பில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமை உதவி இயக்குனர் பாலமுருகன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 90 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். மேலும் சென்னை, விழுப்புரம், புதுவை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளன.

‘பேரறிவாளன் குறித்து குடியரசு தலைவரை சந்தித்தால் திமுக உடன் வர தயார்’ – ஸ்டாலின் அறிவிப்பு!!

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் டிப்லமோ என பல கல்வித்தகுதியின் அடிப்படையில் நேர்காணலை நடத்தி வருகின்றனர். இவர்கள் மொத்தம் 8000 பேரை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் இந்த முகாமில் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பார்த்தசாரதி கலந்துகொண்டார். அவர் வேலைவாய்ப்பு பெற்ற முதல் 250 பேருக்கு வேலைக்கான ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த முகாமில் மண்டல இயக்குனர் பாண்டியவடிவு, மீனாம்பிகை மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here