#INDvsENG டெஸ்ட் – 20வது சதத்தை பதிவு செய்த ரூட்!! வலுவான நிலையில் இங்கிலாந்து!!

0

இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் சிறப்பாக விளையாடி தனது 20 வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அணி முதற்கட்டமாக தற்போது டெஸ்ட் தொடரை விளையாட துவங்கியுள்ளது. இந்த இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை மைதானத்தில் வைத்து துவங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் ரசிகர்களை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் 2 வது டெஸ்ட் போட்டியில் தான் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இங்கிலாந்து அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் சிப்லே களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு வந்தனர். இருவரும் அசத்தலாக விளையாடி 63 ரன்களை குவித்தனர். பின்பு 33 ரன்கள் எடுத்த நிலையில் பர்ன்ஸ் அஸ்வின் சூழலில் சிக்கினார். அதன்பின்பு களம் வந்த லாரன்ஸ் 0 ஏமாற்றினார். பின்பு சிப்லே மற்றும் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தனர்.

20 வது சதம்:

இருவரும் இந்தியா அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டு விளையாடி வருகின்றனர். தொடக்கத்தில் சற்று நிதானமாக விளையாடி வந்தனர். அதன்பின்பு இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். இவர்கள் இருவரின் விக்கெட்டை எடுப்பதற்கு இந்தியா அணியின் பௌலர்கள் திணறி வருகின்றனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிப்லே அரைசதத்தை கடந்து அசத்தினார். இவரை தொடர்ந்து ரூட்டும் அரை சதத்தை கடந்தார்.

விழுப்புரத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் – 90 தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!

பின்பு இருவரும் சதம் அடிக்க தயாராகினர். இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் தனது 20 வது சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். இந்த போட்டி இவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இது இவரது 100 வது டெஸ்ட் போட்டி. தற்போது இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. களத்தில் ரூட் மற்றும் சிப்லே விளையாடி வருகின்றனர். ரூட்டை தொடர்ந்து சிப்லேவும் சதம் அடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து – 249/2

சிப்லே – 85*
ரூட் – 116*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here