அரங்கத்தையே கைகொட்டி சிரிக்க வைத்த ஷிவாங்கி – வேற லெவெலில் வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் இந்த வாரம் பல கலாட்டாக்களுடன் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பல ட்விஸ்ட்டான டாஸ்கை கொடுத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர்.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிக்கு எப்பொழுதுமே ஒரு தனி மவுசு இருக்கும். 5 வருடங்களுக்கு முன்பாக ‘சமையல் சமையல் கிட்சன் கில்லாடிகள்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. இடையில் சில வருடங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இத்தனை வருடங்களுக்கு பிறகு வித்தியாசமான முறையில் காமெடி கலந்த குக்கிங் நிகழ்ச்சியாக கடந்த வருடத்தில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து ரசிகர்கள் அதிகமானார்கள். எப்பொழுது சனி, ஞாயிறு வரும் என்று தவம் கிடந்தனர். ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன் உடன் ஜோடி சேர்ந்த புகழ் அமைதியாக தான் இருந்தார்.

நாளாக அவரது செய்கைகள் மற்றும் அவரது ரியாக்ஷன் வேற லெவெலில் இருந்தது. காமெடியே செய்யாமல் அவரது ஆக்சனால் மட்டும் அனைவரும் சிரிக்க வைத்தார் புகழ். தற்போது இரண்டாவது சீசனும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் புதுமையான டாஸ்க்குக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தலையில் பானையை வைத்துக்கொண்டு சமைக்க வேண்டும்.

நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் கணவர் கவுதம் – ரசிகர்கள் பிரம்மிப்பு!!

மேலும் கோமாளிகள் தவ்விகொண்டே போய் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வர வேண்டும். இதில் பெரிய காமெடியே ஷிவாங்கி தான். அவர் தொத்திக்கொண்டு சென்ற விதம் பார்ப்பவர் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

அது போக அடுத்த ப்ரோமோவில் அஸ்வின் மற்றும் புகழ் சமைத்துக்கொண்டிருக்க வழக்கம் போல வெங்கட் பட் கெடுத்து விடுகிறார். பல கலாட்டாக்களுடன் இந்த வார குக் வித் கோமாளி இருக்க போகிறது என்பது ப்ரோமோவை வைத்து பார்க்கும்போதே தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here