நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலையுடன் கணவர் கவுதம் – ரசிகர்கள் பிரம்மிப்பு!!

0

நடிகை காஜல் அகர்வாலின் உண்மையான உருவம் போலவே இருக்கும் மெழுகு சிலையினை பார்த்து அவரது கணவர் கவுதம் மட்டும் அல்ல அனைவரும் ஆச்சிரியம் அடைந்துள்ளனர். அந்த புகைப்படத்தினை தான் காஜல் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல்

வெளி மாநிலத்தில் இருந்து இங்கு தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான், நடிகை காஜல் அகர்வால். முதன் முதலாக நடிகர் பரத்துடன் தான் ஒரு படத்தில் நடித்தார். ஆனால், அந்த படத்தில் அவருக்கு அவ்வளவாக பெயர் கொடுக்கவில்லை. இப்படியான சூழலில் தான் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை தந்தார்.

அரசு பணி ஊழியர்களுக்கு ஒய்வு வயதை 60 ஆக உயர்த்த முடிவு – தமிழக அரசு திட்டம்!!

அதிலும் குறிப்பாக “மகாதீரா” என்ற திரைப்படத்தில் தான் அதிகமாக பெயர் எடுத்தார். இதனை அடுத்து தமிழில் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இதனை அடுத்து தற்போது இவருக்கு மார்க்கெட் சரிந்துள்ளளது.

இதனால் சினிமா துறையில் இருந்து விலகி தற்போது திருமணம் மற்றும் குடும்ப வாழ்கை என்று சென்று விட்டார். பிரபல தொழிலதிபரான கவுதம் கிச்சுலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தேனிலவுக்கு என்று இந்த தம்பதிகள் மாலத்தீவிற்கு சென்று வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது காஜல் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதில் அவரை போலவே ஒரு மெழுகு சிலையினை வடிவமைத்துள்ளனர். இந்த சிலைக்கு பக்கத்தில் காஜல் மற்றும் அவரது கணவர் உள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here