அரசு பணி ஊழியர்களுக்கு ஒய்வு வயதை 60 ஆக உயர்த்த முடிவு – தமிழக அரசு திட்டம்!!

0
மாநிலத்தில் பிப்ரவரி 20ம் தேதி முழு விடுமுறை அறிவிப்பு - அரசு அதிரடி உத்தரவு!!

தற்போது வரை 59 வயதில் ஓய்வு பெரும் அரசு ஊழியர்கள் இனி தங்களது 60 வயதில் ஓய்வு பெரும் சட்டத்தை விரைவில் அரசு கொண்டு வரவுள்ளது. இதைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள்:

அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 58 ஆக தமிழக அரசு நிர்ணயித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு இந்த முடிவை தமிழக அரசு மாற்றி அமைத்தது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக அரசு துறைகளில் பணி புரியும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியது. இதனால் அரசுக்கு சற்று பணப்பற்றாக்குறை பிரச்னை தீர்ந்தது. மேலும் அரசின் சார்பில்  ஓய்வுபெறுவோர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணபலங்கள்  வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா என்னும் வைரஸ் வந்து உலகையே உலுக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதித்தது. தற்போது தான் நம் நாடு கொரோனாவில் இருந்து சற்று மீள தொடங்கியது. இதனால் பொருளாதாரமும் தற்போது தான் சரிவில் இருந்து மீள தொடங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் மீண்டும் பணப்பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஓய்வூதியம் மற்றும் பணபலன்களை வழங்கும் தொகையை இரண்டு ஆண்டுகளுக்கு மிச்சப்படுத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

பிக்பாஸ் நட்சத்திரத்துடன் ஜோடி சேரும் ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரம் – வெளியான ட்விட்டர் பதிவு!!

இதன் காரணமாக தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதின் அளவை 59ல் இருந்து 60 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது நடைபெற்று வரும் சட்டசபையில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளிவந்தால் தமிழக அரசுக்கு இந்த ஆண்டு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த தொகை அடுத்த ஆண்டு தான் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here