பிக்பாஸ் நட்சத்திரத்துடன் ஜோடி சேரும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் கவினுடன் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் பிரபலமான, நடிகை பவித்ரா லட்சுமி ஜோடியாக நடிக்க உள்ளதாக தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை பவித்ரா லட்சுமி

திரைத்துறையின் மாடலான நடிகை பவித்ரா லட்சுமி சில குறும்படங்களினல் நடித்துள்ளார். இவர் நடித்து 2018 ம் ஆண்டு வெளியான ‘3 சீன்ஸ் இன் லவ்’ என்ற குறும்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா. தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பவித்ரா லட்சுமி தற்போது பிக்பாஸ் சீசன் 3  புகழ் கவினுடன் நடித்து வருகிறார்.

செல்ல நாயுடன் கொஞ்சி விளையாடும் கீர்த்தி சுரேஷ் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

 

ஆரம்பத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்த நடிகர் கவின் பிக்பாஸ் சீசனுக்கு பிறகு வெள்ளிதிரையில் நடித்து வருகிறார். நடிகை ரம்யா நம்பீசனுடன் ”நட்புன்னா என்னனு தெரியுமா” என்ற படத்தில் நடித்திருந்தார் கவின். தொடர்ந்து ‘பிகில்’ பட புகழ் அம்ரிதாவுடன் இணைந்து ‘லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களின் ஏக ஆதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது கவின் நடித்து வரும் ஒரு புதிய படத்தில் பவித்ரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது கவினுடன் எடுத்துள்ள புகைப்படத்தை நடிகை பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here