‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன், செந்தில்வாசன் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்!!

0

இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் காணொளிகளை பதிவிட்டதாக கூறி ‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூட்யூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசன் மீது கடந்த ஆண்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்றம்.

‘கறுப்பர் கூட்டம்’ யூட்யூப் சேனல்

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூட்யூப் சேனல் இந்துக்களின் புனித நூலான கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறான பதிவுகளை இணையதளத்தில் பதிவிட்டுள்ளதாக கூறி, சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் மற்றும் ராமபுரத்தை சேர்ந்த சுரேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28 ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு கால சிறை தண்டனை விதித்து போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

#INDvsENG டெஸ்ட் – இரண்டு விக்கெட்களை இழந்து தவிக்கும் இங்கிலாந்து அணி!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

செந்தில்வாசன், சுரேந்திரன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதால் அவர்களால் ஒரு வருடம் வரைக்கும் ஜாமீனில் வெளி வர முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. இது தொடர்பாக சுரேந்திரனின் மனைவி கீர்த்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here