ரம்யா பாண்டியனுக்கும் சோமுக்கும் திருமணமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பிக் பாஸும் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிய சோம் மற்றும் ரம்யா இடையே காதல் பல வதந்திகளை ரசிகர்கள் பரப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது அவர்கள் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ரம்யா, சோம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். இவர் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என அனைவரும் எதிரிபார்த்திருந்தனர்.அதே போலவே அவரும் கலந்துகொண்டார். எப்படியும் ஒவ்வொரு சீசனிலும் எதாவது ஒரு காதல் ஜோடி இருக்கும். ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாகவே இருந்தது.

முதலில் கேபி பாலாஜி இடையே காதல் இருப்பதாக காட்டப்பட்டது. ப்ரோமோவில் லவ் சாங் எல்லாம் போட்டு விட்டனர். ஆனால் அது நாளடைவில் ஷிவாங்கி பாலாஜி இடையே நட்பு மலர ஆரம்பித்தது. 70 நாட்களுக்கு மேல் ஒன்றாக சுற்றி திரிந்த ஷிவானி பாலாஜி இடையே இடி விழும் அளவிற்கு பிரீஸ் டாஸ்கில் ஷிவானி அம்மா வெளுத்து வாங்கி விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு ஷிவானி பாலாஜி பக்கமே திரும்பி பார்க்கவில்லை. இந்த சீசனில் அடுத்த காதல் ஜோடி தான் ரம்யா சோம். இருவரும் சொல்லிக்கொள்ளாமலேயே மனதிற்குள் வைத்து சுற்றி திரிந்தனர். ரம்யா ஆரம்ப நாளிலேயே சோமிடம் ஒரு சாக்லேட்டை கொடுத்திருந்தார். அதிலிருந்தே சோம், ரம்யாவை ஜோடி சேர்த்தனர் ரசிகர்கள்.

புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இணையும் சூப்பர் காம்போ – மரண மாஸாக வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

ஷிவானி பாலாஜிக்கு எவ்வளவோ லவ் ஸ்டேட்டஸ் வந்ததோ அதே அளவிற்கு ரம்யா, சோமிற்கும் இருந்தது. இந்நிலையில் தற்போது அனைவரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. சோம் மற்றும் ரம்யா சேர்ந்து மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தான் அது. மேலும் ரம்யா சோமுடன் தனக்கு இருக்கும் உறவை பற்றி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். சோம் தனக்கு சிறந்த நண்பர் மட்டுமே என்று கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here