காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு – கவலையில் மக்கள்!!

0

மாதந்தோறும் 1ம் தேதி அன்று காஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்கும். ஆனால் இந்த மாதம் 1ம் தேதி அன்று காஸ் சிலிண்டர் விலை பற்றிய தகவல் வெளிவரவில்லை.  தற்போது புதிய விலை படி சமையல் காஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்துள்ளது.

காஸ் சிலிண்டர்:

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய்யின் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு ஏற்ப இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதத்திற்கு ஒரு முறை காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. மேலும் மாதம் தோறும் 1ம் தேதி அன்று காஸ் சிலிண்டரின் விலை பற்றிய தகவல் வெளியாகும். ஆனால் இந்த மாதம் 1ம் தேதி அன்று அது பற்றிய தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் அதற்கு மாறாக 19கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை பற்றிய தகவல் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விலை அதிகரிப்பு:

அதன்படி இதன் விலை ரூ.191 அதிகரித்துள்ளது. மேலும் தற்போது சென்னையில் 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ.1,649 ஆகவும் மற்றும் சேலத்தில் ரூ.1,610 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலை பற்றிய தகவல் இன்று வந்துள்ளது. கடந்த 1ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் தான் அன்று காஸ் சிலிண்டரின் விலையை மாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது இன்றைய அறிவிப்பின் படி காஸ் சிலிண்டரின் விலை ரூ. 25 அதிகரித்துள்ளது. இதனை சர்வதேச எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி இதுவரை ரூ.710க்கு விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா சிலிண்டர் தற்போது பழைய விலையில் இருந்து ரூ.25 அதிகரித்து ரூ.735 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலத்தில் ரூ.753 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி – வெளியான சம்பள பணம் விவரம்!!

இதேபோல் டெல்லி, மும்பை ஆகிய மாநிலங்களில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.719 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.745.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தான் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று எண்ணெய் நிறுவனங்களின் அலுவலர்கள் கூறியுள்ளனர். மேலும் வரும் மாதங்களிலும் காஸ் சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விலை அதிகரிப்பால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here