மீண்டும் இணையும் வைபவ், வாணிபோஜன் ஜோடி – இணையத்தில் கசிந்த தகவல்!!

0

ஏற்கனவே லாக்கப் என்னும் திரைப்படத்தில் வைபவ் மற்றும் வாணிபோஜன் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது அடுத்ததாக ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள் வைபவ் மற்றும் வாணிபோஜன்.

ராதாமோகன்:

அழகிய தீயே என்னும் திரைப்படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானார் ராதாமோகன். அந்த படம் இவர் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அதன்பின்பு கடந்த 2007ம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளிவந்த மொழி மற்றும் 2008ல் வெளியான அபியும் நானும் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை தொட்டார் இயக்குனர் ராதாமோகன். அதன்பின்பு பயணம், கெளரவம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர் திரைப்படத்தின் கதை அனைத்தும் மிக எளிமையாக இருக்கும். ஆனால் படம் மக்கள் மனதை ஈர்க்கும் வகையில் இருக்கும். அதுதான் இவரின் சிறப்பு. தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகிகளுள் ஒருவர் தான் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் இவர் பிரபலமாகியுள்ளார். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இவர் சூர்யா தயாரிக்கும் புதிய படம் உள்ளிட்ட பல படங்களில் பிசியாகி வருகிறார்.

புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இணையும் சூப்பர் காம்போ – மரண மாஸாக வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

தற்போது ராதாமோகன் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக வைபவ் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படம் ஓடிடியில் தான் வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதற்கு முன்னதாக லாக்கப் என்னும் திரைப்படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here