#INDvsENG முதல் டெஸ்ட் – டாஸ் வென்று பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணி!!

0

இன்று சென்னையில் வைத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியாவிற்கு போட்டிகளை விளையாட வந்த இங்கிலாந்து அணி தற்போது முதல்கட்டமாக டெஸ்ட் போட்டியை விளையாட துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி இந்தியா நேரப்படி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இங்கிலாந்து அணி தரப்பில் முதலாவதாக ஜோசப் பர்ன்ஸ் மற்றும் சிப்லே களம் இறங்கியுள்ளனர். இருவரும் இந்தியா அணியின் பந்துவீச்சை அற்புதமாக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் வரும் முடிவுகள் குறித்தே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் அணி பற்றிய தகவல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா அச்சம் காரணமாக முதல் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்கவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

காஸ் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு – கவலையில் மக்கள்!!

முதல் டெஸ்டில் விளையாடும் இந்தியா அணி:

ரோஹித், சுப்மங் கில், புஜாரா, கோஹ்லி(C), ரஹானே, ரிஷாப் பாண்ட்(W), சுந்தர், அஸ்வின், பும்ராஹ், இஷாந்த் சர்மா, நதீம்.

முதல் டெஸ்டில் விளையடும் இங்கிலாந்து அணி:

பிரின்ஸ், சிப்லே லாரன்ஸ், ரூட்(C), ஸ்டோக்ஸ், போப், பட்லர்(W), பெஸ், ஆர்சேர், லீச், ஆண்டர்சன்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து – 16/0

பர்ன்ஸ் – 8*
சிப்லே – 7*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here