இனி வீட்டில் பச்சை கிளி வளர்த்தால்.., அவ்வளவு தான் போங்க.., வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

0
இனி வீட்டில் பச்சை கிளி வளர்த்தால்.., அவ்வளவு தான் போங்க.., வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
இனி வீட்டில் பச்சை கிளி வளர்த்தால்.., அவ்வளவு தான் போங்க.., வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

சமீப காலமாக பச்சை கிளியை வீட்டில் வளர்க்க படுகிறதா என்று வன அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சோதனை போட்டு வருகின்றனர். அண்மையில் ரோபோ சங்கர் வீட்டில் வளர்ந்த பச்சை கிளிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி வீடுகளில் பச்சைக்கிளி, கவுதாரி, பனங் காடை, நீல பைங்கிளி, வண்ணச் சிட்டு,பஞ்சவர்ண புறா, மைனா போன்ற வன உயிரினங்களை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டில் இது போன்ற உயிரினங்களை வளர்த்து வந்தால் உடனே வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

மது பிரியர்களே இனி அவ்வளவு தான்…, இழுத்து மூடப்போகும் டாஸ்மாக் பார்கள்.., தமிழக அரசு ஆக்சன்!!!

ஒருவேளை வனப் பணியாளர்கள் ரோந்து வரும் போது கண்டுபிடிக்கப்பட்டால் கிளிகள் உள்ளிட்டவைகளை வளர்த்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிவாசல்கள், சர்ச் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படுகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here