ரஜினிமுருகன் பட பிரபலம் மாரடைப்பு காரணமாக மரணம் – அதிர்ச்சியில் திரை உலகம்!!

0
ரஜினிமுருகன் பட பிரபலம் மாரடைப்பு காரணமாக மரணம் - அதிர்ச்சியில் திரை உலகம்!!
ரஜினிமுருகன் பட பிரபலம் மாரடைப்பு காரணமாக மரணம் - அதிர்ச்சியில் திரை உலகம்!!

தமிழ் சினிமாவில் கடந்த சில தினங்களாகவே பல முக்கிய பிரபலங்கள் தொடர்ந்து தங்களது உயிரை இழந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த முக்கிய பிரபலம் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.

பவுன்ராஜ் மரணம் :

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மிக மோசமான ஆண்டு என்றே சொல்லலாம். காரணம் தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் என்றாலும் மறுபுறம் பல திரையுலகினர் தொடர்ந்து மரணமடைந்து வருகின்றனர். இது மேலும் மக்களை வேதனை அடைய செய்கிறது. தற்போது அந்த வகையில் ரஜினிமுருகன் போன்ற படங்களில் நடித்த பவுன்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் இயக்குனரான பொன்ராமின் இணை இயக்குனர் ஆவார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பவுன்ராஜ் மரணம் :
பவுன்ராஜ் மரணம் :

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதுவரை பவுன்ராஜ் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா போன்ற படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவரது நகைச்சுவை அனைத்தும் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.அதேபோல் மதுரைக்காரனாக இவர் பேசும் தமிழும் அனைவராலும் கவரப்பட்டது. இந்நிலையில் இவர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனை இயக்குனர் பொன்ராம் ட்விட்டர் மூலம் தெரிவித்தார். இது திரை உலகினர் அனைவரிடமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here