மீண்டும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி..! அந்த ஒரு ஏமாற்றத்தை பற்றி கூறுவாரோ..?

0

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் வெகுவேகமாக தயார்படுத்தி கொண்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு கட்சி தொடங்கி சட்ட சபை தேர்தலில் போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்தார். கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 5 ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். தற்போது ரஜினிகாந்த் நாளை மார்ச் 12 மீண்டும் மாவட்டச் செயலாளர்களை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கவுள்ளார்.

கட்சி தொடங்குவாரா மாட்டாரா..!

வருகிற சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவேன் என்று அறிவித்திருந்த ரஜினி இன்றுவரை எந்த அறிவிப்பும் கொடுக்காமல் இருக்கிறார் . கடந்த மார்ச் 5 ஆம் தேதி மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது நிறைய விஷயங்களை பரிமாறிக் கொண்டோம். அவர்களுக்கு ரொம்ப திருப்தி ஆனால் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தி கிடையாது ஏமாற்றம் தான் அது என்ன என்பது இப்போது கூற விரும்பவில்லை நேரம் வரும்போது சொல்கிறேன் என கூறியுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார்..?

கடந்த மார்ச் 5 ஆம் தேதி மாவட்ட செயலாளர்களை சந்தித்த ரஜினி அவர்கள் முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்தலாம் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் அதற்கு மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் நாளை மார்ச் 12 மன்ற மாவட்ட செயலாளர்களை அவரது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்திக்கவுள்ளார் எனவும் அந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பற்றிய உறுதியான தகவல்களும் மற்றும் கட்சி தொடங்கும் தேதியும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here