சந்தியாவின் முட்டாள் தனத்தால் சரவணன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து.., வெறுத்து ஒதுக்கும் சிவகாமி குடும்பம்!!!

0
சந்தியாவின் முட்டாள் தனத்தால் சரவணன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து.., வெறுத்து ஒதுக்கும் சிவகாமி குடும்பம்!!!
சந்தியாவின் முட்டாள் தனத்தால் சரவணன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து.., வெறுத்து ஒதுக்கும் சிவகாமி குடும்பம்!!!

சரவணனின் உயிரை காப்பாற்ற சந்தியா எடுக்கும் முயற்சியால் அவரின் IPS கனவு என்னாகும் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தீவிரவாதிகள் வைத்த அனைத்து குண்டுகளையும் சந்தியா தன்னுடைய திறமையால் செயல் இழக்க செய்கிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட தீவிரவாதிகள் ஜோதி போலீஸ் பிடியில் சிக்கி விட்டார் என அவரைக் காப்பாற்ற வருகின்றனர். அப்போது சரவணனையும் சேர்த்து தீவிரவாதிகள் கடத்தி செல்கின்றனர். இதனை அடுத்து கௌரி மேடம், சரவணன் மீட்க உயர் அதிகாரிகள் பல்வேறு திட்டங்களை தீட்டுகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதில் சந்தியாவும் தான் உடன் வருவதாக சொல்கிறார். இதனை ஏற்க மறுக்கும் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று சொல்கின்றனர். ஆனால் சந்தியா தன் கணவனை காப்பாற்ற வேண்டும் என்று போலீசாருக்கு தெரியாமல் காட்டுக்குள் தனியாக செல்கிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அமீர் பாவனி ஜோடிக்கு விரைவில் திருமணம்., வாவ், தேதில கூட இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளானா?

அதாவது அடுத்து வரும் எபிசோடுகளில் சந்தியாவின் சூழ்ச்சி திட்டத்தை தெரிந்து கொண்டு தீவிரவாதிகள் சரவணன் கொல்ல திட்டம் போடுவார்களாம். இதனால் போலீஸார்கள், சிவகாமி குடும்பம் என அனைவரது கோபமும் சந்தியா பக்கம் திரும்புமாம். ஆனால் இந்த சூழ்நிலைகளைக் கடந்து சந்தியா சரவணனை காப்பாற்றுவாரா?? இல்லையா?? என்பதுதான் கதையின் ட்விஸ்ட்டே. அப்படியே காப்பாற்றினாலும் உயர் அதிகாரிகளின் பேச்சை மீறி காட்டுக்குள் சென்றதற்கு கண்டிப்பாக சந்தியாவின் IPS கனவுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here