அமீர் பாவனி ஜோடிக்கு விரைவில் திருமணம்., வாவ், தேதில கூட இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளானா?

0
அமீர் பாவனி ஜோடிக்கு விரைவில் திருமணம்., வாவ், தேதில கூட இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளானா?
அமீர் பாவனி ஜோடிக்கு விரைவில் திருமணம்., வாவ், தேதில கூட இவ்ளோ பெரிய மாஸ்டர் பிளானா?

பிக்பாஸ் பிரபலங்களான அமீருக்கும் பாவனி ரெட்டிக்கும் கூடிய விரைவில் கல்யாணம் நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அமீர் – பாவனி:

தற்போதைய சோசியல் மீடியாவில் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அமீர் – பாவனி. சின்னத்திரையில் பாவனியும், நடனத்தில் அமீரும் பிசியாக இருந்த வேளையில், உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாவனியை அமீர் ஒருதலையாக காதலித்து வந்தார். அதன் பிறகு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை அடித்தனர். அந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் அமீர் தனது காதலை பாவனியிடம் வெளிப்படுத்தினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதனை ஏற்றுக்கொண்ட பாவனி அமீரை இன்பத்தில் ஆழ்த்தினார். சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து இருந்தனர். ஒரு சில சீன்கள் வந்தாலும் தங்களது கேரக்டருக்கு அழகாக உயிர் கொடுத்தனர். இந்த நிலையில் அமீர் – பாவனி திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் கைகோர்த்த தளபதி 67 பட நடிகர்.., வாவ் இது நம்ம நினைச்சு கூட பார்க்காத காம்போ வா இருக்கு!!

அதாவது அமீர் – பாவனி வருகிற பிப்ரவரி 15ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவின. பிப்ரவரி மாதம் Lovers Dayவ நினச்சு கூட அந்த தேதியை fix பண்ணிருக்கலாம்னு ரசிகர்களால் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பாவனி மறுத்துள்ளார். நாங்கள் இப்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளோம். இன்னும் நாங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் அதிகம் இருக்கிறது. எனவே திருமணம் நடைபெறும். ஆனால் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here