போச்சு.., பார்த்திபன் வாழ்க்கை அவளோ தான்.., விவாகரத்து கேட்டு நிற்கும் காவியா.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

0

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது ரசிகர்கள் அதிரும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

ஈரமான ரோஜாவே 2

ஈரமான ரோஜாவே சீரியலில் பார்த்திபனுக்கு காவியா மீது அளவு கடந்த காதல் இருந்து வரும் நிலையில் பார்வதி இருவரையும் சேர விடாமல் பிரித்து வருகிறார். காவியாவிற்கும் பார்த்திபன் மீது காதல் வந்துவிட்டது. ஆனால் இது சரிப்பட்டு வராது என்று முடிவு செய்துவிட்டார். இந்த காதலை ஏற்றால் கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வரும், இதனால் பிரியா வாழ்க்கையில் கெட்டுவிடும் என்று ஏற்கனவே யோசித்து இருந்ததால், பார்த்திபனுடன் இருக்கும் வரை சந்தோஷமாக இருந்துவிடலாம் என்று அவருடன் பெங்களூரு வரை சென்று இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்படி இருக்க இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது பார்த்திபன் பிறந்தநாள் விழாவை வீட்டில் விமர்சையாக கொண்டாடுகின்றனர். பார்த்திபன் காதலுடன் உனக்கு என்ன வேணும்னு கேளு, நீ என்ன கேட்டாலும் நான் தருவேன் என்று சொல்கிறார். அதற்கு காவியா மனஸை கல்லாக்கி கொண்டு எனக்கு விவாகரத்து வேண்டும் என்றும். கையெழுத்து போட்டால் சந்தோஷப்படுவேன் என்றும் சொல்கிறார்.

சந்தியாவின் முட்டாள் தனத்தால் சரவணன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து.., வெறுத்து ஒதுக்கும் சிவகாமி குடும்பம்!!!

இதனால் குடும்பம் மொத்தமும் ஆடிப் போய் விடுகிறது. பார்த்திபன் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீருடன் நின்று கொண்டுள்ளார். எப்படியும் பார்த்திபன் கையெழுத்து போட்டு விடுவார். மேலும் இதற்கான காரணமும் வெளியில் தெரிய வரும். கலவரம் வெடித்தால் தான் மொத்த உண்மையும் வெளியே வரும். பார்வதியின் உண்மை முகமும் வெளியே வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here