அட்ராசக்க.. ரயில் பயணிகள் மொபைலில் வாட்ஸ் அப் இருந்தா போதும் – இனி அந்த தொல்லையே இல்லை!

0
அட்ராசக்க.. ரயில் பயணிகள் மொபைலில் வாட்ஸ் அப் இருந்தா போதும் - இனி அந்த தொல்லையே இல்லை!

ரயிலில் பயணிக்கும் பயணிகள் இனி பிடித்த உணவை வாட்ஸ் அப் மூலம் ஆர்டர் செய்து செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வசதி:

உலகளவில் உள்ள அனைத்தும் அன்லைன் மூலமாக நடந்து வருகிறது. இதனால் சராசரியாக ஒரு மனிதனின் வேலை குறைந்தே காணப்படுகிறது. அந்த வகையில் ஹோட்டல் கடையில் சென்று உணவருந்திய காலம் போய் நாம் இருக்கும் இடத்திலேயே விருப்பப்பட்ட உணவை உண்ணும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதாவது சில ஆன்லைன் ஆப்கள் மூலம் உணவை ஆர்டர் செய்து வீடு தேடி வரவழைத்து மக்கள் உணவை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு விருப்பப்பட்ட உணவினை ஆர்டர் செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பொதுவாகவே, ரயிலில் பயணிக்கும் போது பயணிகளுக்கு விருப்பப்பட்ட உணவை உண்ணாமல் கிடைக்கும் உணவை உண்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையை மாற்றும் விதமாக இனி ரயிலில் பயணம் செய்யும்போதே பிடித்தவற்றை ஆர்டர் செய்து கொள்ளலாம். அதாவது வாட்ஸ்அப் மூலமாக விருப்பப்பட்ட உணவை ஆர்டர் செய்யலாம். மேலும் PNR எண்ணை வைத்தே ஆர்டர் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. ஆர்டர் செய்த உணவு தங்களது இருக்கைக்கே கொண்டு வந்து டெலிவரி செய்யும்படியான சேவையை IRCTC வழங்கியுள்ளது. இந்த வசதி ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here