அடுத்த வருட IPL தொடரில் தோனி விளையாடுவாரா?? வெளியான முக்கிய அப்டேட்!!

0
அடுத்த வருட IPL தொடரில் தோனி விளையாடுவாரா?? வெளியான முக்கிய அப்டேட்!!
இந்தியாவில் நடைபெற்று வரும் IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தது. இதை அடுத்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்றுவிட்டாரா? இல்லையா? என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வார காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை அணியின் CEO காசி விஸ்வநாதன் தோனி ஓய்வு குறித்து ஓர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது எனக்கு தோனியின் ஓய்வு பற்றி தெரியாது, இந்த கேள்விக்கு தோனியால் மட்டுமே பதில் சொல்ல முடியும், அவர் எடுக்கும் முடிவுகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். தோனி CSK அணிக்காக அடுத்த வருடமும் விளையாடுவார் என மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறோம். இதுதான் ரசிகர்கள் மற்றும் என்னுடைய எதிர்பார்ப்பு என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here