ரகசிய திருமணம் செய்துகொண்ட மருது பட வில்லன் ஆர்.கே. சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

0
Rk suresh

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர், வில்லன் என பல முகங்களில் வலம் வருபவர் ஆர்.கே. சுரேஷ். தற்போது அவரது திருமணம் ரகசியமாக நெருங்கிய உறவினர்களை வைத்து நடந்துள்ளது. திருமணம் நடந்ததற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே. சுரேஷ்

தமிழில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஆர்.கே. சுரேஷ். இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட. தாரை தப்பட்டை படத்திலேயே வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார். அதன் பிறகு அவர் நடித்த மருது திரைப்படமும் மக்களிடையே நல்ல பிரபலத்தை அடைந்தது. வில்லனாக மட்டுமல்ல பல கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

Rk suresh

‘தர்மதுரை’ மற்றும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ போன்ற படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தர்மதுரை படத்தில் தயாரிப்பாளரும் இவர் தான். மேலும் தமிழில் மட்டும்மல்ல மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் இவர். ஜோசஃப் என்ற மலையாள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Rk suresh

சின்ன திரை நடிகையான திவ்யாவை திருமணம் செய்ய உள்ளதாக சில வருடங்களுக்கு முன்னாள் கூறியிருந்தார் ஆர்.கே. சுரேஷ். ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தற்போது மது என்கிற ஃபைனான்சியரை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் ரகசியமாக நடந்துள்ளது. நெருங்கிய உறவுகள் மற்றும் அழைத்து இந்த திருமணத்தை நடத்தியுள்ளார் ஆர்.கே. சுரேஷ்

Rk suresh

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் தாலிக்கட்டும் புகைப்படத்தை வெளியிட்ட ஆர்.கே. சுரேஷ், அதில் குறியிருந்ததாவது, எனது சந்தோஷமான இந்த தருணத்தை உங்களிடம் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. இது வரை எனக்கு அளித்து வந்த ஆதரவிற்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here