Tuesday, April 23, 2024

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Must Read

வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆந்திர பிரதேசத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் நிலைமையை அடிப்படையாய் கொண்டு டிசம்பர் மாதத்திற்கு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், தமிழகத்தில் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பள்ளிகளை திறக்கலாம் என்று ஆந்திர அரசு முடிவு செய்தது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், அங்கு தொடர்ச்சியாக தினசரி 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதனால் அரசு பள்ளிகள் திறப்பது குறித்தான முடிவுகளை ஒத்திவைத்தது. தற்போது ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றிற்கு 3000 என்று சரிந்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தற்போது பள்ளிகள் நவம்பர் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்திற்கு மட்டும் தான்:

பள்ளிக்கு வரும் மாணவர்கள் அதாவது 1,3,5 மற்றும் 7 வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒரு நாளில் பாடங்களை கற்று வருவர். பின், 2,4,6 மற்றும் 8 வகுப்பு மாணவர்கள் ஒரு நாளில் பள்ளிகளுக்கு வந்து பாடங்களை கற்று கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது நவம்பர் மாதத்திற்கான அறிவிப்பு மட்டும் தான் என்றும் கொரோனா பரவல் நிலைமையை அடிப்படையாய் கொண்டு டிசம்பர் மாதத்திற்கு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -