மூக்குல, நெத்தியில பரு வருதா?? அப்போ ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!!

0
மூக்குல, நெத்தியில பரு வருதா?? அப்போ ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!!
மூக்குல, நெத்தியில பரு வருதா?? அப்போ ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!!

முகத்தில் வரும் பருக்கள் மூலம் சில உடல்நல பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இது குறித்து முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பருக்கள்:

இன்றைய காலகட்டத்தில் முகப்பருவால் அவதிப்படும் பெண்கள், ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. முகப்பருவை விரட்ட என்ன செய்யலாம் என்று பல வழிகளை நாம் தேடி ஓடுகிறோம். மேலும் அந்த வரிசையில் ஆண்களும் சளைத்தவர்கள் இல்லை. நம் முகத்தில் ஒவ்வொரு இடங்களிலும் உண்டாகும் பருக்கள், நம் உடம்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை சொல்கிறது என்று தகவல்கள் கூறுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் “மேல் நெற்றியில்” பரு வந்தால் அஜீரணக் கோளாறின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது. அதனால் சாப்பாடு சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து அதிகமாக டீ, காபி குடிப்பதை தவிர்த்து, ஆண்டி ஆக்சின் அதிகம் உள்ள கிரீன் டீ குடிப்பது நல்லது. இதை தொடர்ந்து “புருவங்களுக்கு மேலும், நடுவிலும்” பருக்கள் வந்தால் போதுமான அளவு தூக்கம் இல்லை, மன அழுத்தம், சீரான ரத்த ஓட்டம் இல்லை என்று அர்த்தம். இதிலிருந்து விடுபட நாள்தோறும் 8 மணி நேரம் தூங்குவது நல்லது.

இதை தொடர்ந்து “கன்னத்தில்” வரும் பருக்கள் சுவாச பிரச்சனைகளை சுட்டுகாட்டுகிறது. அதாவது வெளியே தூசி படிந்த காற்றை சுவாசிப்பது , சருமத்தில் படுவது மூலம் பருக்கள் வருகிறது. அதனால் வெளியில் போய்ட்டு வந்ததும் முகத்தை கழுவ வேண்டும். மேலும் அழகு சாதனப் பொருட்கள், தலையணைகள், செல்போன்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். இந்த வகையில் “மூக்கில்”பருக்கள் வந்தால் இதயம் மற்றும் ரத்த அழுத்த்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். அதனால் உடனே bp செக் பண்ணுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here