
lpg கேஸ் சிலிண்டரை திருடுவதை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்:
மக்களின் அன்றாட வாழ்வில் தேவைப்படும் பொருட்களில் ஒன்றாக இருந்து வருவது தான் வீட்டின் சமையல் எரிவாயு. இந்த சமையல் எரிவாயு வீடுகள் மட்டுமின்றி பெரும்பாலான உணவகங்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சமீப காலமாக சிலிண்டரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றும் திருடுகிறார்கள் என்றும் அரசாங்கத்திடம் மக்கள் தங்கள் புகார்களை தெரிவித்து வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் இது போன்ற காரியங்களை செய்யாமல் தடுப்பதற்காக மத்திய அரசு ஒரு புதிய முறையை கையாண்டு உள்ளது. அதாவது உலக எல்பிஜி வாரம் 2022 என்ற தலைப்பில் நவம்பர் 14 – 18 வரை சிலிண்டர் பொருட்காட்சி நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற்றது. இந்த சிலிண்டர் பொருட்காட்சியை பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பார்வை செய்து வந்தார்.
சபரி மலையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும் ,, அறிவுறுத்தலை வாபஸ் பெற்ற கேரள அரசு!!
அதன் பின்னர் சிலிண்டர்களில் QR Code ஒட்டபட்டிருப்பதை பார்த்து அதனை விசாரித்தார். அதாவது இனி புதிதாக தயாராகும் சிலிண்டர்களில் QR Code வெல்டிங் செய்து விநியோகம் செய்யப்படும். மேலும் யாராவது திருடி சென்றால் இந்த QR Code மூலம் அவர்களை ஈசியாக கண்டு பிடித்து விடலாம் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.