தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி!!

0

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடம் கற்று வருகின்றனர். பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக்கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் பேரிடர் மேலாண்மை துறை தனியார் பள்ளிகள் பெற்றோர்ளை வற்புறுத்தி கட்டாய கல்விக்கட்டண வசூலில் ஈடுபடக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து கல்வி நிறுவன கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கல்விக்கட்டணம் முறையாக பெறாவிட்டால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என வாதிடப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Chennai High Court
Chennai High Court

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் அவர்கள், இரண்டு தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கினார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 40 சதவீதமும், வகுப்புகள் தொடங்கிய பின் 35% கட்டணமும் வசூலிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனைமீறி கட்டாய கல்விக்கட்டண வசூலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவில் கூறப்பட்டது. அது குறித்த ஆவணங்களை நவம்பர் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி அவர்கள்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது பள்ளிகளும் திறக்கப்பட தகுந்த சூழல் இல்லாத காரணத்தால், மீதமுள்ள 35% கட்டணத்தை வரும் 2021 பிப்ரவரி மாதத்திற்குள் வசூலித்துக் கொள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனை தவணை முறையில் வசூலிப்பது குறித்து அந்தந்த பள்ளிகள் முடிவு செய்து கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here