மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

0

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக இன்ஜினியரிங் உள்ளிட்ட பிற படிப்புகளின் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நேரடி முறையில் நடைபெறுவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கலந்தாய்வில் கலந்து கொண்ட 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மருத்துவ கலந்தாய்வு:

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட வரைவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கல்வியாண்டு முதலே அது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் 313 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். மேலும் நேற்று மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கி முதல்வர் விழாவினை தொடங்கி வைத்தார். அவ்விழாவில் பிற அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தினசரி 500 மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அனைவர்க்கும் கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கொரோனா பரவல் என்பது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here