“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

0

பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை கூட்டத்தில் பேசினார். அப்போது குடியரசு தலைவரின் உரையினை கூட யாரும் சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார்.

பிரதமர் உரை

குடியரசு தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த மக்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த கூட்டத்தில் 50 மக்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் 25 வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். அவர் தனது உரையின் போது தலைவர்கள் உரையினை சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்பவர்கள் குறித்து பேசினார்.

மோடிக்கு கொலை மிரட்டல் – கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!!

அதே போல் குடியரசு தலைவரின் உரை மிகவும் வலிமையானது என்றும் தெரிவித்தார். அவர் தனது உரையில் கூறியதாவது, “நாட்டின் குடியரசு தலைவர் வழங்கும் உரை மிகவும் வலிமையானது. அதனை சிலர் முழுதாக கேட்காமல் விமர்சனம் செய்கின்றனர். அவரது உரை நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய ஒன்று”

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“மக்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனாவிற்காக விளக்கேற்றிய நிகழ்வினை கூட சிலர் கிண்டல் செய்தனர். இந்திய கொரோனா என்ற கண்ணனுக்கு தெரியாத எதிரியிடம் இருந்து வெளிவந்ததற்கு முழுமுதற் காரணம், இந்திய அரசாங்கமோ அல்லது தனி நபரோ கிடையாது. இந்திய மக்கள் அனைவரும் தான் கூட்டாக இணைந்து செய்தது” இவ்வாறாக உரை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here