மோடிக்கு கொலை மிரட்டல் – கனடாவின் காலிஸ்தான் அமைப்பின் அறிவிப்பால் பரபரப்பு!!

0
pm narendira modi
pm narendira modi

நமது பாரத பிரதமர் மோடிக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தான் எனும் அமைப்பிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது. கனடா நாட்டிற்கான இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இது போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அந்நாட்டு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொலை மிரட்டல்:

இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருகின்றது. கனடா நாட்டினை சேர்ந்த காலிஸ்தான் எனும் அமைப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் குரல் கொடுத்துவருகின்றனர். போராட்டங்களை மேற்கொள்வதோடு, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் ஒட்டாவாவிலுள்ள இந்திய தூதரகத்தில் பணி புரியும் அதிகாரிகளுக்கும், வான்கூவரிலுள்ள துணை தூதரக அதிகாரிகளுக்கும் கடந்த டிசம்பர் 26ம் தேதி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், தற்போது வான்கூவரிலுள்ள இந்திய துணை தூதரகத்திற்கு வெளியில் காலிஸ்தான் அமைப்பினை சேர்ந்த இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த அமைப்பின் மற்றொரு உறுப்பினரான நாரிந்தர்சிங் கால்ஸா என்பவரின் முகநூல் பக்கத்திலிருந்த இக்கொலை மிரட்டலுக்கான பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

எனினும் இது தொடர்பாக அந்நாட்டு போலீசாரிடம் புகாரளிக்கப்பட்ட போதும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருந்து வருவதை தொடர்ந்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் கார்னியூவை தொலைபேசியில் அழைத்து இதுகுறித்து பேசியுள்ளார். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒட்டாவா மற்றும் வான்கூவரிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தூதரகம் கனட வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here