சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி – நோட்டீஸ் அனுப்பிய போலீசார்!!

0

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா இன்று தமிழ்நாடு வருகைதந்துள்ளார். அவர் வந்த வாகனத்தில் தடையை மீறி அதிமுக கொடியை பறக்க விட்டதினால், கிருஷ்ணகிரி போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சசிகலாவுக்கு நோட்டீஸ்

கடந்த மாதம் 20 ம் தேதி பெங்களூரு சிறையிலிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு விக்டோரியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார். இந்நிலையில் ஜனவரி 27 ம் தேதி, நான்கு ஆண்டு கால சிறை தண்டனை முடித்து சிறையிலிருந்து விடுதலையானார் சசிகலா. பெங்களூரு விடுதி ஒன்றில் ஓய்வு எடுத்த பின்பு இன்று தமிழகம் திரும்பியுள்ளார். தமிழகம் திரும்பிய அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

முன்னதாக மருத்துவமனையிலிருந்து பெங்களூரு விடுதிக்கு வந்த சசிகலா காரில் அதிமுக கொடியை அவர் பயன்படுத்தியதாக கூறி, அதிமுகவினர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பெங்களூரிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா வாகனத்தில், அதிமுக கட்சி கொடியை பறக்க விட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடி அருகே வந்த சசிகலாவின் காரில் தடையை மீறி பறக்கவிடப்பட்டிருந்த கொடி அகற்றப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ஓசூர் ஜூஜூவாடி அருகே இன்னொரு காருக்கு மாறினார் சசிகலா. அந்த வாகனத்திலும் அதிமுக கொடி பறக்க விடப்பட்டது. இதனால் கட்சி கொடியை தடையை மீறி பயன்படுத்தியதாக கூறி கிருஷ்ணகிரி போலீசார் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் சசிகலா காரிலிருந்த கொடியை போலீசார் அகற்றவில்லை. சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தமிழகம் வந்த கார் இன்னொரு அதிமுக உறுப்பினருடையது என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here