#INDvsENG டெஸ்ட் – 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா அணி தங்களது முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு சுருண்டது. தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி சென்னை மைதானத்தில் வைத்து தங்களது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 578 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து கேப்டன் ரூட் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் ரூட் 218, சிப்லே 87 மற்றும் ஸ்டோக்ஸ் 82 ரன்களை குவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா அணி தரப்பில் பும்ராஹ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர் அதன்பின்பு தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்தியா அணி படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் 6, கில் 29, விராட் 11, ரஹானே 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்தியா அணி திணற துவங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்ட் மற்றும் புஜாரா அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தனர். இருந்தும் புஜாரா 73 மற்றும் பாண்ட் 91 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

337க்கு ஆல் அவுட்:

பின்பு களமிறங்கிய சுந்தர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அசத்தினார். ஒருபுறம் சுந்தர் சிறப்பான ஆடடத்தை வெளிப்படுத்த மற்றோரு பக்கம் இந்தியா அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அஸ்வின் 31, நதீம் 0, இஷாந்த் 4, பும்ராஹ் 0 எடுத்து ஆட்டமிழந்துள்ளனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 337 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.

சசிகலா காரை துரத்தி செலஃபீ எடுத்துக்கொண்ட இளைஞர் – வைரலாகும் புகைப்படம்!!

சுந்தர் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய பெஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அணி 243 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியுள்ளது. இதில் எதிர்பாராத விதமாக துவக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 0 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் சூழலில் சிக்கி தனது ஆட்டத்தை இழந்துள்ளார். களத்தில் சிப்லே மற்றும் லாரன்ஸ் விளையாடி வருகின்றனர்.

லைவ் ஸ்கோர்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் – 578
இந்தியா முதல் இன்னிங்ஸ் – 337
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் – 1/1

சிப்லே – 0*
லாரன்ஸ் – 0*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here