ருசி அள்ளும் இறால் தொக்கு ரெசிபி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுட சுட சாதத்துக்கு வச்சு சாப்பிட்டா மிச்சமே இருக்காது!!

0
ருசி அள்ளும் இறால் தொக்கு ரெசிபி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுட சுட சாதத்துக்கு வச்சு சாப்பிட்டா மிச்சமே இருக்காது!!
ருசி அள்ளும் இறால் தொக்கு ரெசிபி., இந்த மாதிரி செஞ்சு பாருங்க., சுட சுட சாதத்துக்கு வச்சு சாப்பிட்டா மிச்சமே இருக்காது!!

பொதுவாக கடல் உணவுகளில் அதிக சத்துக்கள் இருப்பதால் அதை வாங்கி சாப்பிடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்திருக்கும் இறாலை வைத்து டேஸ்டான தொக்கு சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்;

இறால் – 1/2 கிலோ

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஆயில் – 5 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

செய்முறை விளக்கம்;

இந்த இறால் தொக்கு தயார் செய்வதற்கு 1/2 கிலோ இறால் வாங்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் ஆயில் ஊற்றி அதில் சிறிதளவு சோம்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் இரண்டு தக்காளி, 3 மிளகாய் ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்போது இதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மல்லி தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள இறாலை அதில் சேர்த்துக் கொள்ளவும். மேலும் தொடர்ந்து ஒரு 10 நிமிடம் வதக்கி விட்டு சிறிதளவு, கொத்தமல்லி இலைகளை அதில் தூவி அடுப்பை ஆப் செய்து கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான இறால் ரெசிபி ரெடி.

லட்சுமி ராமகிருஷ்ணனின் 5வது படைப்பான “ஆர் யூ ஓகே பேபி” டீசர் வெளியீடு.., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here