
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், சொந்த படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஓனர், அம்மணி, ஆரோகணம் ஆகிய 4 படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் தற்போது ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிசியாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் டீசரை நித்யா மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது வீடியோ வைரலாக பரவி வருகிறது.