10 நிமிடத்தில் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெடி – கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

0

மதிய உணவு முடித்ததும் ஒரு குட்டி தூக்கம் போடும் இல்லத்தரசிகளுக்கு ஏற்ற மாதிரி, ஒரு நாலு அல்லது ஐந்து மணிக்கு சாப்பிட தோணும்போது, 10 நிமிசத்துல ரெடியாகிடும் நம்ம ரெசிபி. கண்டிப்பா வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!!

தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – 1 தேக்கரண்டி
  • பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  • கறிவேப்பிலை – தேவையான அளவு
  • இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • தனியா தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • வேகவைத்த உருளைக்கிழங்கு – 2

செய்முறை

இந்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்வதற்கு முதலில் சிறிய அளவு உருளைக்கிழங்கில் இரண்டு அல்லது மூன்று எடுத்துக்கொள்ளவும். அதனை நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து 2 தேக்கரண்டி எண்ணெயை சேர்த்துக்கொள்ளவும். தேவையானால் இன்னும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எண்ணெய் நன்றாக சூடாகியதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு சேர்க்க வேண்டும். பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து மெதுவாக வதக்கவும். பாதியளவு வெந்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் மசித்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

‘காருக்குள் கவர்ச்சி’ – வைரலாகும் யாஷிகாவின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

 

சிறிதளவு வதங்கியதும் அதில் மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி, தனியாதூள் 1 தேக்கரண்டி, கரம்மசாலா 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். உருளைக்கிழங்குடன் மசாலா சேர்ந்ததும் அதை அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அடுத்து கால் கிலோ அளவு மைதா மாவை எடுத்து தேவையான அளவு நீர் ஊற்றி அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவு இறுக்கமாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் மீடியம் அளவு இருக்க வேண்டும். பிசைந்த மாவை எடுத்து சப்பாத்தி மாவு பதத்தில் கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ளவும். பிறகு ஏற்கனவே செய்து வைத்த மசாலாவை, தேய்த்து வைத்த மாவுக்கு நடுவில் வைத்து அதை நான்கு பக்கமும் நன்றாக மடித்து கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்து பரிமாறலாம்.

சூடான “பொட்டேட்டோ ஸ்டாபிங்” ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here