சுவை அள்ளித்தரும் உருளைக்கிழங்கு பிரட் சமோசா., இந்த வீக் உங்க வீட்ல செஞ்சு பாருங்க!!

0
சுவை அள்ளித்தரும் உருளைக்கிழங்கு பிரட் சமோசா., இந்த வீக் உங்க வீட்ல செஞ்சு பாருங்க!!
சுவை அள்ளித்தரும் உருளைக்கிழங்கு பிரட் சமோசா., இந்த வீக் உங்க வீட்ல செஞ்சு பாருங்க!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய உருளைக்கிழங்கில் எக்கசக்க ஸ்நாக்ஸ் ரெசிபி நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இதுவரை யாரும் சுவைத்து பார்த்திருக்காத ஒரு டிப்ரெண்ட்டான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்;

  • உருளைக்கிழங்கு – 250 கிராம்
  • பிரட் – 1 பாக்கெட்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • பெரிய வெங்காயம் – 1
  • கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
  • முட்டை – 2
  • சீரகம் – சிறிதளவு
  • உப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை விளக்கம்;

இந்த உருளைக்கிழங்கு பிரட் சமோசா ரெசிபி தயாரிப்பதற்கு முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி அதை மசித்து வைத்துக் கொள்ளவும். மேலும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதன்பிறகு பிரட் துண்டுகளை எடுத்து அதன் நான்கு பக்கமும் அறுத்து நடுவில் இருக்கும் பகுதியை தனியாக எடுத்துக் கொள்ளவும். மேலும் அந்த நான்கு ஓரத்திலும் கட் செய்து வைத்துள்ள துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதுபோக இன்னொரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

குட் நைட் பட நடிகை மேதா ரகுநாத்தின் மொத்த குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் உள்ளே!!

தற்போது பிரட்டின் நடுப்பகுதியை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு தேய்த்து அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை அதன் நடுவில் வைக்கவும். பின் அதை முக்கோண வடிவத்தில் மடக்கிக் கொள்ளவும். மேலும் அதன் பிறகு அதை முட்டை மற்றும் பிரட் க்ரம்ஸ்ஸில் டிப் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது நமக்கு சுவையான உருளைக்கிழங்கு பிரட் சமோசா ரெசிபி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here