கன்னியாகுமரியில் மக்களவை இடைத்தேர்தல் – பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி!!

0

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பாக பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி தொகுதியில் நடந்து முடித்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வசந்த குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் அவர் காலமானார். எனவே அந்த தொகுதியை காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியானதாக அறிவித்த தொகுதியில் அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தேர்தலுடன் மக்களை இடைத்தேர்தலையும் நடத்த முடிவு செய்தது தேர்தல் ஆணையம். தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக கட்சி பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி தொகுதியையும் ஒதுக்கியது.

‘தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படம் நீக்கப்பட வேண்டும்’ – தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!!

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று டெல்லி பாஜக தலைமை அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வசந்த குமார் மகன் விஜய் வசந்த் விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here