‘தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமரின் படம் நீக்கப்பட வேண்டும்’ – தேர்தல் அதிகாரிகள் உத்தரவு!!

0

தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்:

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தலுக்காக பல விதிமுறைகளை தேர்தல் ஆணையர்கள் விதித்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளனர். தற்போது தேர்தல் காரணமாக இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது வரை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கும் சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருந்து வருகிறது. இதனை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இதுகுறித்து மேற்கு வங்க தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – பாஜகவிற்கு 20 இடங்கள் ஒதுக்கீடு!!

இதனை ஏற்ற தேர்தல் அதிகாரிகள் சுகாதார துறைக்கு, சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படத்தை தேர்தல் முடியும் வரை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனை அடுத்து தேர்தல் நடக்கவிருக்கும் இந்த ஐந்து மாநிலங்களில் சான்றிதழில் இருந்து பிரதமரின் புகைப்படம் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here