இந்தோனேசியாவின் மாஸ்டர் பிளான் – மக்கள் வெளியேறுவதை தடுக்க சூப்பர் ஹீரோ வேடமிட்ட போலீஸ்.!

0

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வாரும் நிலையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. சமூக விலகல் ஒன்றே இந்த கொரோனவை கட்டுப்படுத்த தற்போது உள்ள ஆயுதம். மேலும் மக்கள் அனாவசியமாக வெளியே வருவதை தடுப்பதற்காக இந்தோனேசியாவில் சூப்பர் ஹீரோக்களின் உடைகளை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேசியா

இந்தோனேஷியாவில் கொரோனா

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கெபு என்ற கிராமத்தில் வீட்டை விட்டு வெளியேறும் மக்களை பயமுறுத்த, போலீசார் இரவு நேரத்தில் பேய் வேடத்தில் வலம் வருகின்றனர். முதலில் கிராமத் தலைவர் சிலரை இப்படி பேய் வேடத்தில் காவலில் ஈடுபடுத்தியுள்ளார். பின், போலீசாரும் அவர்கள் வழியில் மக்களை பயமுறுத்தி வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.

samayam tamil

இதேபோல கிழக்கு ஜாவாவில் உள்ள பசூரான் நகரில் போலீசார் விதவிதமான சூப்பர் ஹீரோக்களின் உடைகளை அணிந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தோனேஷியாவில் 5,136 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 469 பேர் பலியாகியுள்ளனர். 446 பேர் குணமடைந்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here