ஆந்திர முதல்வருக்கு இன்று பிறந்தநாள் – பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

1

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி உட்பட பிற அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்று அவர் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆந்திராவின் அதிரடி முதல்வர்:

ஆந்திராவின் தற்போதய முதலமைச்சராக பதவி வகித்து வருகின்றவர், ஜெகன் மோகன் ரெட்டி. இவர் ஆந்திராவின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகன் ஆவர். இவர் ஆந்திர மாநிலத்தின் 17வது முதலமைச்சராக செயலாற்றி வருகின்றார். இன்று வரை பல நல திட்டங்களையும், அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பெயர் பெற்றவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தனது தந்தை மரணம் அடைந்ததும் துவண்டு போகாமல் உடனடியாக கட்சி பொறுப்பினை கையில் எடுத்து மற்ற மாநில தலைவர்கள் வியக்கும் படி இன்று ஆட்சி நடத்தி வருகின்றார். இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தலைவர்கள் வாழ்த்து:

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காருவிற்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். சர்வ வல்லமை படைத்த இறைவன் அவருக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான உடல் நலனை வழங்க வேண்டுகிறேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ்!!

அதேபோல் திமுக கட்சித் தலைவரான முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “எனது நல்ல நண்பரும், ஆந்திராவின் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். அவர் அவரது மாநிலத்திற்கும் தனது மக்களுக்கு இன்னும் பல காலங்கள் சேவையாற்ற விரும்புகின்றேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here