கே.ஜி.எஃப் 2 திரைப்பட டீஸர் தேதியை வெளியிட்ட படக்குழு – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

0

கன்னட திரையுலகில் 2018 ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அந்த படத்தின் டீஸர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் திரைப்படம் அம்மாவின் பாசம் மற்றும் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள் கொண்ட கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யாஷ் நடிப்பு இந்த படத்திற்கு கூடுதல் பலம். அவரின் உடலமைப்பு தோற்றம் அனைத்தும் இந்த படத்திற்கு ஒத்துப்போனது. சிறு வயதில் இருந்தே காசுக்கு கஷ்டப்பட்டு வரும் யாஷ் அவரின் அம்மாவின் உடல்நலக்குறைவிற்கு கூட மருத்துவம் பார்க்க முடியாமல் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரின் அம்மா சாகும் தருவாயில் நீ பிறக்கும் போது ஏழையாக இருக்கலாம். ஆனால் சாகும்போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்ற வார்த்தையை மனதில் வைத்துக்கொண்டு வளர்க்கிறார். படம் முழுக்க அதிரடியாகவே உள்ளது. சண்டைக் காட்சிகளும் ஏராளமாக இருந்தது.

இந்த படத்தின் அடுத்த பார்ட்டுக்காக தான் ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டுள்ளனர். இந்த படத்தின் மூலம் யாஷ் அவர்களுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தார்கள். சமீபத்தில் கூட கே.ஜி.எஃப் 2 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

ஆந்திர முதல்வருக்கு இன்று பிறந்தநாள் – பிரதமர் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!

இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் டீஸர் வெளியிடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 8 ஆம் தேதியில் காலை 10.18 மணிக்கு வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பதிவு வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here