இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்!!

0

உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் வேகமாக பரவியுள்ளதை தொடர்ந்து உலக நாடுகள் எச்சரிக்கை அடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிய மத்திய அரசு, இன்று சுகாதாரத் துறையுடன் அவசர ஆலோசனையில் இறங்கவுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டு வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிறகும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதிலும் உலகின் முன்னணி நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் அமெரிக்காவின் ஃபைசர் மற்றும் மாடானா நிறுவனங்களின் தடுப்பூசிகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தனது இயல்பையும், வடிவத்தையும் மாற்றி கொண்டு இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை விட உருமாற்றம் பெற்று புதிதாக பரவி வரும் இந்த வைரஸ் 70% அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடும் அச்சத்தில் உள்ள இங்கிலாந்து அரசு நேற்று முதல் கடுமையான பொது முடக்கத்தை தற்போது தனது நாட்டில் விதித்துள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி!!

இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி மத்திய சுகாதார துறையுடனான அவசர கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறையினருடன் சர்வதேச சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது.

உருமாற்றம் அடைந்த புதிய வைரஸின் தன்மைகள் குறித்தும் அதை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில் தற்போது தாக்கம் குறைந்து இருந்தாலும், கடந்த வெள்ளிக் கிழமையன்று அதிக அளவில் புதிய நபர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்துடனான பயணிகள் போக்குவரத்திற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இத்தாலி, இங்கிலாந்துடனான விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. இம்மாத இறுதியில் தடுப்பூசிகளுக்கான அனுமதி வழங்கவிருக்கும் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தடுப்பூசி போடும் பணியை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கொரியா போன்ற நாடுகளில் இரண்டாவது அலை உருவாகியுள்ளதை தொடர்ந்து, அமெரிக்காவிலும் ஒன்றரை கோடிக்கும் மேல் பாதிப்பு உள்ளது. எனவே இந்தியாவில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here