இன்று வானில் தெரியும் ‘கிறிஸ்துமஸ் ஸ்டார்’ – அதிசயத்தை மிஸ் பண்ணாம பாருங்க!!

0

வானியல் அரிய நிகழ்வாக இன்று சூரிய மண்டலத்தின் மிக பெரிய கோள்களாக கருதப்படும் சனி மற்றும் வியாழன் கிரகங்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்கோட்டில் வர உள்ளது. இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வானியல் அதிசயம்:

9 கோள்களையும், பல கோடி நட்சத்திரங்களையும், மிக பெரிய சூரியனை கொண்டுள்ளது பால்வெளி மண்டலம். இதில் பல வித மாயாஜாலங்கள் மற்றும் அதிசயங்கள் நடைபெறுகின்றன. அதில் இன்று 397 ஆண்டுகளுக்கு பிறகு பல வானியல் அதிசயம் நடைபெற உள்ளது. இன்று பால்வெளி மண்டலத்தின் மிக பெரிய கோள்களாக கருதப்படும் வியாழன் மற்றும் சனி மிக நெருக்கமாக வர உள்ளது. இந்த இரு கிரகங்கள் மிக நெருக்கமாக வருவதை வெறும் கண்களில் பார்க்க முடியும் என்றும் வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது மட்டும் அல்லாமல் இன்று ஆண்டின் மிக நீண்ட இரவாகவும் கருதப்படுகிறது. இந்த வானியல் மாற்றங்களால் கூடுதலாக வானில் இருந்து எரி நட்சத்திரங்கள் பூமியை நோக்கி வர உள்ளன. இந்த எரி நட்சத்திரங்கள் விழும் நிகழ்வு மழை பெய்வது போல் வண்ண ஜாலங்களுடன் இருக்கும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கூகிள் டுடல்:

இந்த நிகழ்வுகள் காரணமாக பூமியின் வளிமண்டலத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் சனி கோள்கள் நெருங்கும் நிகழ்வு கடந்த 1623 ஆம் ஆண்டு நடைபெற்று இருக்கின்றது. இன்று இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. அதே போல் இதே நிகழ்வு அடுத்ததாக 2080 ஆம் ஆண்டு நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

#IND vs AUS மூன்றாவது டெஸ்ட் போட்டி கண்டிப்பாக நடைபெறும் !!

இந்த அதிசயத்தை வெறும் கண்களில் பார்க்கும் போது இரு புள்ளிகள் போல தெரியுமாம், ஆனால் தொலைநோக்கி வாயிலாக பார்க்கும் போது கோள்கள் தெளிவாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வினை குறிக்கும் நிகழ்வாக கூகிள் தங்கள் கூகிள் டூடுலில் வியாழன் மற்றும் சனி கிரகங்களின் படங்களை வைத்துள்ளன. மனிதர்களின் எண்ணங்களையும் தாண்டி இயற்கை பெரும் அதிசயங்களை நிகழ்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here