அவசர காலத்திற்கு தயாராக இருங்கள் – சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை..!

0
PM Modi
PM Modi

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பு:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என அரசினை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. வரும் ஜூன் 31ம் தேதி முதல் அன்லாக் 1.0 (ஐந்தாம் கட்ட ஊரடங்கு) அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வரும் ஜூன் 16ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். இதில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், அவசர காலத்திற்கு தயாராக இருக்குமாறு சுகாதாரத்துறையை அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..!

மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அவசர கால திட்டங்களை தயார் படுத்துமாறும் மத்திய சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here