திரைத்துறைக்கு டாடா சொல்லும் ரஜினிகாந்த் – கடைசியாக நடிக்க உள்ள படங்களின் லிஸ்ட்..!

0
Rajikanth
Rajikanth

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்று பெயர் பெற்ற ரஜினி காந்த விரைவாக அரசியலும் வருவார் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் இனி அவர் எந்த படங்களிலும் நடிக்க போவது இல்லை போன்ற செய்திகள் ரஜினியின் நெருங்கிய வட்டத்தில் செய்திகள் கசிந்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த:

திரை உலக ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ரஜினி காந்த தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் ஆன பாலசந்தர் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இந்தியாவின் தலைசிறந்த விருதுகள் ஆன பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற விருதுகளை பெற்றவர். 40 ஆண்டு காலமாக சினிமா துறையில் இருப்பவர். இன்றும் கூட அவருக்கு என்று ரசிகர் கூட்டம் உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அடுத்தடுத்த படங்கள்:

இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், அண்ணாத்த சிறுத்தை ஷிவா இந்த படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். 103 கோடி ரூபாய் சம்பளம் என்று உறுதி செய்யப்படுள்ளது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளி வரும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்டு உள்ளது. இதற்கு அடுத்ததாக கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படம் இழுபறியில் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் நடைபெறாது எனவும் செய்திகள் வந்துள்ளன.

தெலுங்கானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் எம்எல்ஏ..!

இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு மாஸ் படத்தில் நடிக்க உள்ளாராம் ரஜினிகாந்த். பின்னர் இறுதியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

திரைத்துறைக்கு டாடா:

இந்த நிலையில் ரஜினிகாந்த எப்போதும் அரசியல் கதைகளில் நடிக்க மாட்டார் என்பது தெரிந்த ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள படத்திற்கு பின் திரை துறையில் இருந்து விலகி விடுவார் என்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவர் தனது உடல் நலத்தை கருத்தில் கொன்டே இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here