சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு இந்தியாவில் சலுகை அளிக்க திட்டம்..!

0

கொரோனா வைரஸ் காரணமாக சீனாவை உற்பத்தி மற்றும் சேவை தளமாக வைத்திருக்கும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான சலுகைகள் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் இலக்கு..!

இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதிகளவிலான சலுகை மட்டும் அல்லாமல் அனைத்து விதமான முன்னுரிமையும் கொடுக்க உள்ளதாகவும் மேலும் இந்தியாவில் வர்த்தகம் துவங்கும் தொழிற்சாலைகளுக்கு மூலதன செலவுகளில் சில முக்கியச் சலுகையைக் கொடுக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை – பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதா..?

சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் இடமாற்றம் செய்ய வாய்ப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது உற்பத்தி தளத்தை ஓரே இடத்தில் இருந்து இயக்குவது தவறு என்ற புரிதலுக்கு வந்துள்ளது. சீனா தற்போது பல்வேறு வர்த்தகப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் நிறுவனங்களுக்குக் கடுமையான நெருக்கடிகள் உருவாகியுள்ளது.

இதனால் பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறும் அல்லது சில பகுதி உற்பத்தியை வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் எனத் தெரிகிறது.

இந்தியா கைப்பற்றத் திட்டம்..!

இந்த வாயப்பை தான் இந்தியா கைப்பற்றத் திட்டமிட்டு ஒவ்வொரு துறைக்கும் பிரத்தியேக குழுவை அமைத்துச் சீனாவில் இருந்து வெளியேறும் முடிவில் இருக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுவரை இந்தியத் தரப்பில் இருந்து சுமார் 100 நிறுவனங்களிடமும் முதலீட்டாளர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. மேலும் இந்திய அரசு எந்த மாநிலத்தில் நிலம், வர்த்தக வாய்ப்பு ஊழியர்கள் தேவை ஆகிய அனைத்து விதமான தகவல்களையும் சேகரித்து வைத்து தயாராக உள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் – அதிகரிக்கும் மோதல்..!

இதனால் இந்தியாவிற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் வர அதிகளவிலான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here