இந்தியாவில் முதலீடு செய்ய 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் – அதிகரிக்கும் மோதல்..!

0

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வருகின்ற நிலையில் மறுபுறம் சீனாவினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பல நாடுகள் கூறி வருகின்றன. சீனா தற்போது பொருளாதார ரீதியாக முன்னேற பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அமெரிக்கா எச்சரிக்கை..!

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொடிய வைரஸினை சீனா வேண்டுமென்றே பரப்பி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் அவ்வாறு சீனா செய்தது உறுதியானால் சீன மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் உள்ள வைரலாஜி ஆராய்ச்சி மையத்தில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் அல்லது அங்கிருந்து பரவி இருக்கலாம் என்று கூறும் டிரம்ப் இதற்காக ஒரு தனி குழுவையும் விசாரிக்க அனுப்ப உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா அனனைவரையும் சமமாக நடத்தவேண்டும்..!

இந்திய உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறுகின்றது. சீனா நிறுவனங்கள் சந்தைக் கொள்கைக் அடிப்படையில் தேர்வுகளை செய்கின்றன. சீன முதலீடுகள் இந்திய தொழில்துறையின் வளர்ச்சியினை உந்துகின்றன. ஆக இந்தியா அனைத்து நாடுகளையும் முதலீட்டில் சமமாக நடத்த வேண்டும் என்றும் சீனாவின் தூதரக அதிகாரி ஜி ரோங் கூறியுள்ளார்.

இந்தியாவில் தொடங்க ஆர்வம்..!

கொரோனா வைரஸினைத் தொடர்ந்து சீனா தனது மிக விருப்பமான 1,000 உற்பத்தி நிறுவனங்களை இழக்க நேரிடலாம். ஏனெனில் சுமார் 1,000 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிசினஸ் டுடேவில் வெளியான அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்படுள்ளது.

இதற்காக பல்வேறு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் 1000 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் அவற்றில் குறைந்தபட்சம் 300 நிறுவனங்கள் மிக தீவிரமாக உள்ளதாகவும் அரசின் உயர் மட்ட அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவுக்கு மாற்றாக இந்தியா..!

இந்தியா சீனாவுக்கு மாற்று உற்பத்தி இடமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்பு இது குறித்த உண்மைகள் வெளி வரும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற பல நாடுகள் சீனாவினை அதிகம் நம்பியுள்ளன. ஆனால் தற்போது அவை இந்தியாவுக்கு வர நினைக்கின்றன.

அதாவது அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25.17% ஆகக் குறைத்தது மத்திய அரசு. அதோடு புதிய உற்பத்தியாளர்களைப் பொறுத்தவரையில், 17% வரி விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இது தென் கிழக்கு ஆசியாவிலேயே மிகக் குறைவான வரி என்றும் கூறப்படுகிறது. ஆக இது வெளிநாட்டு முதலீடுகளை எளிதில் ஈர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா கவர்ச்சிகரமான நாடு..!

பொதுவாகவே இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் கவர்ச்சிகரமான நாடாக திகழ்கிறது. இதன் உள்நாட்டு சந்தை பலமும் சரி ஏற்றுமதியும் சரி முதலீட்டாளார்களுக்கு ஏதுவானதாக உள்ளது. ஒன்று இந்தியாவின் சந்தை மிகப்பெரியது. மற்றொன்று ஏற்றுமதிக்கு சாத்தியமான மையமாகவும் உள்ளது.

மேலும், இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உற்பத்தி செலவுகள் வேறுபாடு சுமார் 10 -12% உள்ளது. ஆக நிறுவனங்கள் இந்தியாவினை நோக்கி படையெடுக்க இதுவும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here