உலகளவில் 25 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு, 1.7 லட்சத்தை தாண்டிய உயிர் பலி – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

0

உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்:

  • உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 2,482,343
  • உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 170,473
  • உலகளவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை – 652,172

உலகளவில் மிகப்பெரிய வல்லரசு நாடாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில் தான் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகளும் அங்கு தான் அதிகமாக உள்ளது.

அமெரிக்கா ரிப்போர்ட்:

பாதிக்கப்பட்டவர்கள் – 792,938 பேர்
உயிர் இழந்தவர்கள் – 42,518 பேர்

இத்தாலி ரிப்போர்ட்:

பாதிக்கப்பட்டவர்கள் – 181,228 பேர்
உயிர் இழந்தவர்கள் – 24,114 பேர்

ஸ்பெயின் ரிப்போர்ட்:

பாதிக்கப்பட்டவர்கள் – 200,210 பேர்
உயிர் இழந்தவர்கள் – 20,852 பேர்

ஜெர்மனி ரிப்போர்ட்:

பாதிக்கப்பட்டவர்கள் – 147,065 பேர்
உயிர் இழந்தவர்கள் – 4,862 பேர்

பிரான்ஸ் ரிப்போர்ட்:

பாதிக்கப்பட்டவர்கள் – 155,383 பேர்
உயிர் இழந்தவர்கள் – 20,265 பேர்

வைரஸ் பரவலுக்கு காரணமான சீனாவில் தற்போது இதன் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அங்கு புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. மொத்தம் 82,758 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4,632 பேர் உயிரிழந்து உள்ளனர். ஏறக்குறைய 77 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு கொரோனா தாக்கத்தில் இருந்து குணமடைந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here