மாஸ்க், கிருமிநாசினி, சோப்பு & கையுறைக்கு ஜிஎஸ்டி வேண்டாம் – அரசுக்கு ராகுல் காந்தி கோரிக்கை

0

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் வேளையில் மாஸ்க், கிருமிநாசினி, சோப்பு & கையுறைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

GSTFreeCorona:

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கொரோனா தொற்று பரவி வரும் இந்த கடினமான நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்கும சிறிய, பெரிய உபகரணங்கள் அனைத்துக்கும் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் துப்புறவாளர்களிடம் சோப்புகள், மாஸ்க்குகள், கையுறைகள் போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பது தவறானது என பதிவிட்டு உள்ளார். மேலும் #GSTFreeCorona என்ற ஹேஷ்டேக்-ஐயும் உருவாக்கி உள்ளார்.

தற்போதைய ஜிஎஸ்டி:

இந்தியாவில் தற்போது இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவற்றிற்கு தற்போதைய ஸ்லாபின் கீழ் ஐந்து சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி உள்ளது. மார்ச் கடைசி வாரத்தில் ராய்ட்டர்ஸ் நடத்திய ஆய்வில், வரும் நாட்களில் இந்தியாவுக்கு நான்கு கோடி முககவசங்களை 62 லட்சம் யூனிட் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் தேவைப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here