பூஜ்ஜியம் டாலருக்கும் கீழே சென்ற கச்சா எண்ணெய் விலை – பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதா..?

0

கொரோனாவின் ஆட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது. கொரோனவால் பல பாதிப்புகளை உலகமே கண்டுள்ளது. பொருளாதாரம், உயிர் பழி பங்கு சந்தை சரிவு என இதுவரை கண்டிடாதவற்றை எல்லாம் இப்போ கண்டுள்ளோம். கொரோனா நோயால் எல்லா தொழில்துறையும் பெருமளவு முடங்கியுள்ளது. அனைத்து நாடுகளிலும் தொழில் துறைகள் ஓய்வு எடுத்து வருகின்றன.

வரலாறு காணாத கச்சா எண்ணெய் விலை சரிவு

கொரோனவால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.இதன் பாதிப்பு காரணமாக உலக அளவில் பொருளாதார செயல்பாடுகள் நின்றுவிட்டதால் உற்பத்தியான கச்சா எண்ணெயை வாங்க நிறுவனங்கள் முன்வரவில்லை. இதனால் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக கச்சா எண்ணெய் ஒரு டாலருக்கும் கீழ் சென்று உள்ளது.வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார செயல்பாடுகள் முடங்கியுள்ளன,

வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து அனைத்தும் கொரோனா காரணமாக முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் வெளியே வராமல் வீ்ட்டுக்குள் இருப்பதால் போக்குவரத்தும் முடங்கி பெட்ரோல், டீசல் தேவை சரிந்துள்ளது. இப்படி ஒரே நாளில் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு வரலாற்றில் முதல்முறையாக இப்படி சரிவை சந்தித்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கச்சா எண்ணெய் விலை விவரம்

அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை அங்கு ஒரு டாலருக்கு கீழே போனது.சர்வதேச அளவில் சந்தையில், நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே கச்சா எண்ணெயையை விலைக்கு வாங்க யாரும் தயாரில்லை -35.34 டாலருக்கு விற்பனையாகி பின்னர் மோசமாக -53.61 டாலராக வீழ்ச்சி அடைந்து இறுதியாக 18.27 டாலர்களில் முடிந்தது.

வர்த்தகத்தில் நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் -40.32 டாலர்கள் சரிவைச் சந்தித்தது.இது வரலாறு காணாத சரிவாகும்.அமெரிக்காவில் உள்ள West Texas intermediate (WTI) நிறுவனத்தின் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது.WTI கச்சா எண்ணெய் விலை 100% சரிவை கடனுள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விலையை WTI கச்சா எண்ணெய் சந்தித்தது இல்லை

பெட்ரோல் டீசல் விலை குறையுமோ ?

கச்சா எண்ணெய் விலைச் சரிவால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை,அப்படி குறைந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் வருமோ… என்ற எண்ணம் மக்களின் எல்லோர் மனதிலும் ஓடும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here