ஆண்களை கொடுமைப்படுத்தும் மனைவிகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை

0

கொரோனவால் கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது,இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளிய வர முடியாமல் இருக்கின்றனர், இதனால் ஆண்கள் வேலைக்கு கூட செல்ல முடியாமல் தங்களது பணியை வீட்டில் இருந்தவாறே பார்த்து வருகின்றனர். ஆனால்ஆண்களை அவர்களது மனைவிகள் கொடுமை செய்வதாகவும் தங்களை பாதுகாக்க ஒரு அவசர ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சருக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு ஹெல்ப் லைன் எண் வேணும்

ஊரடங்காள் மக்கள் அனைவரும் தங்களது வீட்டுக்குள் முடங்கிக் இருக்கிறார்கள். கொரோனா பரவலுக்கு அஞ்சி உலக மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்லே இருக்கிறார்கள்.பணிக்கு கூட செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது  இதனால் வீட்டில் உள்ளெ இருக்கும் ஆண்களின் நிலை பரிதாபமாக உள்ளது. குடும்ப வன்முறை உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் ஆண்களை வாட்டி வருகிறார்களாம் அவர்களது மனைவிகள். நம் நாட்டில் பெண்களுக்கு என பல ஆதரவான சட்டங்களை இருக்கிறது ஏதும் செய்தால் சட்டத்தின் அடிப்படையில் புகார் அளித்துவிடுவேன் என ஆண்களை அடிமைத்தனம் படுத்தப்படுகின்றனர்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, குடும்ப வன்முறையில் ஈடுபடும் ஆண்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று கூடுதல் டி.ஜி.பி., ரவி வெளியிட்டுள்ள அறிக்கை ஆண்களுக்கு கடுமையான வேதனைகளை தருகிறது. சொந்த வீட்டில் உணவுக்காக ஆண்கள் கையேந்தும் நிலையில் உள்ளனர்.மனைவிகளால் பலர் மனதளவில் கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். நிராயுதபாணியாகவும், குடும்ப வன்முறை குறித்து புகார் கொடுக்க முடியாமலும், பல ஆண்கள் வெளியில் சொல்லமுடியாத துயரத்தையும் அனுபவித்து வருகின்றனர்.

உதவி எண்

ஆனால், தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையம் ஆகியவை இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆண்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறைகளை முறையிடவே இடமில்லாத சூழலில், இந்த அறிக்கை ஒருதலைபட்சமானதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும். எனவே கொரோனா எனும் கொடும் வைரசைவிட, குடும்ப வன்முறையால் அதிகம் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாத்திடவேண்டும்.

குறைந்தபட்சம் ஆண்களின் பிரச்சினைகளைத் தெரிவிக்க, ஒரு ‘ஹெல்ப் லைன்’ தொலைபேசி எண் சேவையை அரசு உடனடியாக தொடங்கவேண்டும். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். ஆண்களை பாதுகாக்க ஆண்கள் ஆணையமும் உருவாக்கவேண்டும்.இவ்வாறு தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் வக்கீல் டி.அருள்துமிலன். இவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here