இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்து உள்ளதால் நாடு முழுவதும் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் இதுவரை 19,984 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1383 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 640 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,870 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் 15,474 பேரில் 77 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விபரம்:
- மஹாராஷ்டிரா – 5218 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 251 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- குஜராத் – 2178 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 90 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- டெல்லி – 2156 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- தமிழ்நாடு – 1596 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- ராஜஸ்தான் – 1659 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.
- மத்தியப்பிரதேசம் – 1552 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு இதுவரை 76 பேர் உயிரிழந்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |