Friday, May 3, 2024

ஸ்டெர்லைட் ஆலையினை திறக்க ஒரு போதும் அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!

Must Read

தமிழகத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளன ஸ்டெர்லைட் அலையினை ஒரு போதும் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ததை அடுத்து இவ்வாறாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலை:

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனம் சார்பில் நடத்தப்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த ஆலையின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கு பல உடல் நல உபாதைகள் வருகின்றது எனவும் இந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவுகளினால் சுற்றுசூழல் மாசு அடைகிறது எனவும் கூறி மக்கள் இந்த ஆலையினை திறக்க அனுமதிக்க கூடாது என்று கூறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது பெரும் போராட்டமாக வெடித்து, போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கலைத்தனர், அப்போது 13 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். பெரும் சர்ச்சைக்கு உள்ளான இந்த ஆலையினை தமிழக அரசு திறக்க தடை விடுத்தது. இதனை அடுத்து இந்த ஆலையினை நிறுவும் வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் ஆலையினை திறக்க அனுமதி வேண்டி வழக்கு ஒன்றினை தொடுத்தது.

அரசு திட்டவட்டம்:

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு விதித்துள்ள தடை நீடிக்கும் என்று அதிரடியாக உத்தரவிட்டு உள்ளனர். அதே போல் அந்த வழக்கினை தள்ளுபடியும் செய்தது. இதனை அடுத்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஆலையினை திறக்க வேண்டும் என்று மேல்முறையீடு மனு ஒன்றினை தொடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அரசு சார்பில் கூறப்பட்டதாவது, “ஆலையை திறக்க ஒரு போதும் அனுமதி வழங்க முடியாது. இடைக்காலமாக ஆலையினை திறக்க கூட நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” இவ்வாறாக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -